அதிபர் தேர்தல் குறித்த விவாதம்: டிரம்ப் கலந்துகொள்ளப்போவதில்லை

அதிபர் தேர்தல் குறித்த விவாதம்: டிரம்ப் கலந்துகொள்ளப்போவதில்லை

2 mins read
76d06a33-e177-45a7-8133-d3c45c9134b3
2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பிலான குடியரசுக் கட்சியின் முதல் விவாதம் புதன்கிழமையன்று விஸ்கான்சினின் மில்வாக்கி பகுதியில் நடைபெறவிருக்கிறது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: 2024இன் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் விவாதத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்கர்கள் தம்மை நன்கு தெரிந்துவைத்திருப்பதால் அதற்கான தேவை இல்லை என்று அவர் சொன்னார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பிலான குடியரசுக் கட்சியின் முதல் விவாதம் புதன்கிழமையன்று விஸ்கான்சினின் மில்வாக்கி பகுதியில் நடைபெறவிருக்கிறது.

இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஆக அண்மையில் சிபிஎஸ் நியூஸ் மேற்கொண்டதைப் பற்றி டிரம்ப் அவரது சமூக இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்துக்கணிப்பில் தாம் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக இருப்பதை டிரம்ப் சுட்டினார்.

அந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டோரில் 62 விழுக்காட்டினர் டிரம்ப்மீது இவ்வாண்டு நான்கு முறை குற்றச்சாட்டு சுமத்தியபோதிலும் அவருக்கே வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தனர்.

சிபிஎஸ் கருத்துக்கணிப்பில் டிரம்ப்புக்கு அடுத்தபடியாக வந்தார், ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ். அவருக்கு 16 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திரு டிசாண்டிஸ், வட டக்கோட்டாவின் ஆளுநர் டக் பர்கம், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட மேலும் ஏழு வேட்பாளர்கள் விவாதத்திற்குத் தகுதிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்