வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் திறந்துவிட விதித்திருந்த காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளார்.
அதற்குள்ளாக நீரிணை குறித்து ஈரான் ஏதேனும் ஓர் ஒப்பந்தத்தை எட்டவேண்டும். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அந்த நிபந்தணையை விதித்த அதிபர் டிரம்ப், 24 மணிநேரத்துக்குள் நீரிணையை ஈரான் திறக்கவில்லை எனில், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள்மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூர் நேரப்படி, அந்தக் காலக்கெடு புதன்கிழமை (ஏப்ரல் 8) காலை 8 மணியுடன் முடிகிறது.

