டிக்டாக்கில் டிரம்ப்

1 mins read
‘தடை செய்ய முயன்றவரே தற்போது இணைந்துள்ளார்’
040d00f3-4ec7-4317-90c2-a08ec021dc4e
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது பதவிக்காலத்தின்போது சீனச் செயலியான டிக்டாக்கைத் தடை செய்ய முயன்றார் என்பதை அரசியல் ஊடகமான பொலிட்டிகோ சுட்டிக்காட்டியது. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், டிக்டாக் செயலியில் இணைந்துள்ளதாக அரசியல் ஊடகமான பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.

அவர் தமது பதவிக்காலத்தின்போது சீனச் செயலியான டிக்டாக்கைத் தடை செய்ய முயன்றதை அது சுட்டிக்காட்டியது.

‘அல்டிமேட் ஃபைட்டிங் சேம்பியன்ஷிப்’ எனும் தற்காப்புக் கலைகளுக்கான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டானா ஒய்ட்டுடன் வெளியிட்ட காணொளியில் தாம் டிக்டாக் கணக்குத் தொடங்கியிருப்பதைத் திரு டிரம்ப் கூறியதாக பொலிட்டிகோ குறிப்பிட்டது.

இந்தத் தகவலைச் சரிபார்க்க இயலவில்லை என்று புளூம்பெர்க் தெரிவித்தது.

திரு டிரம்ப்பின் பிரசாரக் குழுப் பேச்சாளரும் இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.

இளம் வாக்காளர்களை ஈர்க்க முயலும் டிரம்ப் தரப்புக்கு டிக்டாக் கணக்கு மேலும் ஒரு சமூக ஊடகப் பரப்பைத் தரும். சென்ற வாரம், 34 குற்றச்சாட்டுகளில் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு 52.8 மில்லியன் அமெரிக்க டாலர் (S$71.5 மில்லியன்) நிதி திரட்டியிருப்பதாக டிரம்ப் பிரசாரக் குழு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்