முன்னிலையில் டிரம்ப்

2 mins read
50588a54-d845-436c-8cc5-026690ca6581
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் அதிபர் வேட்பாளாரான டோனல்ட் டிரம்ப்பின் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வாய்ப்பு உள்ளதாக முன்னோட்ட முடிவுகள் காட்டுகின்றன. பிற்பகல் 3.00 மணி (சிங்கப்பூர் நேரம்) நிலவரப்படி டிரம்ப் 266 வாக்குகளையும் கமலா ஹாரிஸ் 194 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சீனாவின் மீது அதிக வரி, அமெரிக்காவிற்கான தென்கிழக்கு ஆசிய ஏற்றுமதிகளுக்கு பாதகமாக அமையும் பலவீனமான அமெரிக்க டாலர், சீனாவுடனான உத்திபூர்வ போட்டி வலுப்பது என்று டிரம்ப் மீண்டும் அதிபரானால் தென்கிழக்காசியாவுக்கு பாதகமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, டிரம்ப்பின் கீழ் அமெரிக்க தலைமையின் மீதான வட்டார நம்பிக்கை குறையக்கூடும்.

எனினும், திருவாட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் என வாஷிங்டனின் இருவரும் ஒப்பீட்டளவில் தடைகளுடான வர்த்தகக் கொள்கைகளைத் தொடர வாய்ப்புள்ளது. டிரம்ப் தலைமைத்துவத்தில் இது இன்னும் அதிகரிக்கும்.

முன்னாள் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளபடி, வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள் டிரம்பின் முன்னைய ஆட்சியின் கீழ் மேம்பட்டன. சிங்கப்பூர் தொடர்ந்து வாஷிங்டனுடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்தது. வாஷிங்டனுடனான கோலாலம்பூரின் ஒத்துழைப்பும் தொடர்ந்தது, அதே நேரத்தில் “அமைதியான அமெரிக்க அரசதந்திரம்” பிலிப்பீன்சுடனான ராணுவ ஒத்துழைப்பை அடித்தளமாகக் கொண்டிருந்தது.

சீனா-அமெரிக்க வர்த்தகப் போரின் பயனாளிகள் மலேசியா, வியட்னாம், தென்கிழக்கு ஆசியா (‘தென்கிழக்கு ஆசிய வாஷிங்’ என அறியப்படுகிறது) வழியாக அமெரிக்காவிற்கு சீனா ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் முகாந்திரம் இல்லாமல் இல்லை - சீன-அமெரிக்க பதற்றங்கள் அதிகரிக்கும்போதும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நடுத்தர சக்திகளுடன் இணைந்து செயல்பட முடியும். இது வட்டாரத்தை நிலைப்படுத்த உதவும்.

ஒட்டுமொத்தமாக தென்கிழக்கு ஆசியாவில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்காது.

குறிப்புச் சொற்கள்