தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீண்டநாள் விசுவாசியை புதிய தலைமைச் சட்ட அதிகாரியாக டிரம்ப் நியமித்தார்

1 mins read
5242b69c-c358-44e5-bff7-0155186d315b
டிரம்ப்புடன் பேம் பொண்டி, 59. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய தலைமைச் சட்ட அதிகாரியாக திருவாட்டி பேம் பொண்டி என்பவரை, அதிபர் பதவிக்குத் தேர்வாகி இருக்கும் டோனல்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

ஏற்கெனவே தலைமைச் சட்ட அதிகாரியாகப் பெயர் குறிப்பிடப்பட்ட மேட் கேட்ஸ் மீது எதிர்த்தரப்பினர் குறைகூறியதைத் தொடர்ந்து, அந்த நியமனத்தை ஏற்க அவர் மறுத்தார்.

அதனைத் தொடர்ந்து புதியவரை டிரம்ப் அறிவித்தார்.

“குற்றங்களுக்கு எதிராக அமெரிக்காவைக் காப்பாற்றும் பொறுப்பில் திருவாட்டி பேம் செயல்படுவார்.

“அவரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். விவேகமானவர், கடுமையாக உழைக்கக்கூடியவர், அமெரிக்கருக்கே முன்னுரிமை என்று முழங்கக்கூடியவர்.

“அப்படிப்பட்ட ஒருவர் தலைமைச் சட்ட அதிகாரியாகத் திறம்படச் செயல்படுவார்,” என்று டிரம்ப் தனது சொந்த ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

திருவாட்டி பேம், 59, டிரம்ப்பின் நீண்டகால விசுவாசி. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் 2020ஆம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டபோது டிரம்ப்பின் தற்காப்பு வழக்கறிஞராகச் செயல்பட்டார்.

டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார்.

குறிப்புச் சொற்கள்