தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்: அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூடுதல் நேர பணிக்கான வரி வசூலிக்கப்படாது

1 mins read
3498478c-0ddc-40f5-9f85-f4f0cb66121c
அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

அரிசோனா: வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தாம் மீண்டும் அதிபரானால் கூடுதல் நேரம் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்துக்கு வரி விதிக்கப்படாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

“முன்வைக்கப்படும் கூடுதல் வரி குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கூடுதல் நேர பணிக்கான வரி வசூலிக்கப்படாது,” என்றார் டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்