மீண்டும் கியூபாவை மிரட்டும் டிரம்ப்

மீண்டும் கியூபாவை மிரட்டும் டிரம்ப்

1 mins read
183e1948-4b63-41c4-b35c-24c52d601221
அமெரிக்கா கொடுத்துவரும் நெருக்கடியால் கியூபா செய்வது அறியாது நிற்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கியூபாவைக் கைப்பற்றப் போவதாகத் திங்கட்கிழமை (மார்ச் 16) சூளுரைத்துள்ளார்.

“கியூபாவிற்கு நான் விடுதலை தரலாம், அல்லது முழுமையாகக் கைப்பற்றலாம். இப்போது அந்த நாடு பலவீனமாக உள்ளது,” என்று திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கியூபா தொடர்பாக அண்மை நாள்களில் திரு டிரம்ப் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாகக் கியூபா போதிய எண்ணெய் இறக்குமதி இல்லாமல் தடுமாறி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் கியூபாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதனால் அங்கு மின்சாரம் இல்லாமலும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமலும் மக்கள் தடுமாறுகின்றனர்.

அமெரிக்கா கொடுத்துவரும் நெருக்கடியால் கியூபா செய்வது அறியாது நிற்கிறது. உணவு, மருந்து, இதர அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு மக்களிடையே சினத்தைத் தூண்டியுள்ளது.

9.6 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள கியூபா தற்போது இருளில் மூழ்கியுள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டுள்ளது.

மின்சார விநியோகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கியூபா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்