தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரிஸோனாவிலும் டிரம்ப் வெற்றி

1 mins read
8e6a7f4a-0a6a-41fd-8c9c-222d63b40329
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் டிரம்ப்புக்கு 74.6 மில்லியன் வாக்குகள் (50.5%) கிடைத்துள்ளன. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிஸோனா மாநிலத்திலும் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அதன்மூலம், வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய ஏழு மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸை அவர் தோற்கடித்துள்ளார்.

மிச்சிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கேரோலைனா, விஸ்கோன்சின், நெவாடா, அரிஸோனா ஆகிய ஏழு மாநிலங்கள் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் ஆகிய இருவரின் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய மாநிலங்களாக இருந்தன.

2020 தேர்தலில் இந்த ஏழு மாநிலங்களில் நார்த் கேரோலைனா தவிர இதர ஆறு மாநிலங்களிலும் டிரம்ப் தோல்வியைத் தழுவினார்.

தற்போது முடிவுகள் தலைகீழாக மாறி, ஏழு மாநிலங்களிலும் டிரம்ப் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிபராகத் தேர்வுபெறத் தேவையான 270 தேர்வாளர் குழு வாக்குகளை அவர் ஏற்கெனவே பெற்றுவிட்டார்.

வாக்கு எண்ணிக்கை இன்னும் சில மாநிலங்களில் தொடருகிறது. அந்த வரிசையில் அரிஸோனா மாநில வாக்கு எண்ணிக்கை முடிவுற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதுவரை பெற்ற வெற்றிகள் மூலம் டிரம்ப்புக்கு 312 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்துப் போட்டியிடட திருவாட்டி ஹாரிசுக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 226.

ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் டிரம்ப்புக்கு 74.6 மில்லியன் வாக்குகளும் (50.5%) திருவாட்டி ஹாரிசுக்கு 70.9 மில்லியன் வாக்குகளும் (48%) கிடைத்திருப்பதாக அசோஷியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்