மயாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டோனல்ட் டிரம்ப், ஃபுளோரிடா, ஒஹாயோ மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், ஆகக் கடைசி நிலவரப்படி அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் முன்னணி வகிப்பதாகப் பல கணிப்புகள் காட்டுகின்றன.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், நியூ ஹேம்ப்ஷியர் (New Hampshire), மேசச்சூசட்ஸ் போன்ற மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.