டிரம்ப்பின் கணக்குகள் முடக்கம்; சமரசத் தொகையாக $33.7 மி., வழங்கும் ‘மெட்டா’

1 mins read
b5768f64-e32b-4908-b7c6-b9d06330a542
சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் சமரசம் தொடர்பான அறிக்கை ஒன்றை மெட்டா நிறுவனம் தாக்கல் செய்தது. - படம்: ஏஎஃப்பி

மெக்சிகோ சிட்டி: 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத திரு டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதற்கு அவர் பேச்சுகளும் பதிவுகளுமே காரணம் எனக் கருதிய சமூக ஊடகத் தளங்களான ‘ஃபேஸ்புக்’, முன்பு ‘டுவிட்டர்’ என அழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ ஆகியவை டிரம்ப்பின் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கின.

இதை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், டிரம்ப் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கைச் சுமுகமாகத் தீர்க்க முடிவுசெய்த ஃபேஸ்புக் உரிமையாளரான ‘மெட்டா’ நிறுவனம் அவருக்குக் கிட்டத்தட்ட US$25 மில்லியன் (S$33.7 மில்லியன்) வழங்க ஒப்புக்கொண்டதாக ஜனவரி 29ஆம் தேதி தெரிவித்தது.

இந்தச் சமரசத் தொகையில், 22 மில்லியன் அமெரிக்க டாலர் டிரம்ப்பின் அதிபர் நூலகத்திற்கான நிதியாகவும் மீதமுள்ளவை வழக்கில் உள்ள பிரதி வாதிகளுக்கும் சட்ட ஆலோசனை பெற்றதற்கான கட்டணமாகவும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் சமரசம் தொடர்பான அறிக்கை ஒன்றை மெட்டா நிறுவனம் தாக்கல் செய்தது.

குறிப்புச் சொற்கள்