டிரம்ப்பின் மருந்துத்துறை வரிகள் பெருநிறுவனங்களை பாதிக்காது

2 mins read
3a4c6c2d-0746-4065-a3cd-d05cc5b912a7
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விதித்துவரும் இறக்குமதி வரிகள் உலகை உலுக்கி வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

மருந்துகள் தயாரிக்கும் பெருநிறுவனங்களை எதிர்கொள்வதைத் தமது தனித்திறனாக வெளிக்காட்டும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், செப்டம்பர் 25ம் தேதி விதித்த இறக்குமதி வரிகள், பெரும்பாலும் அத்தகைய நிறுவனங்களை பாதிக்காது என்று தோன்றுகிறது.

ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் பெருநிறுவனங்கள் அவற்றின் மருந்துகளை தயாரிப்பதால் தற்போதைய வரிகள் அவற்றை பாதிப்பது கேள்விக்குறியானது.

தசை சிகிக்சைக்கான மருந்தைத் தயாரிக்கும் அயர்லாந்தின் பொட்டோக்ஸ் நிறுவனம், எடைக்குறைப்பிற்கான மருந்து தயாரிக்கும் டென்மார்க், அமெரிக்க உள்நாட்டு பெருநிறுவனங்கள் போன்றவை வரியினால் அதிகம் பாதிப்படையப்போவதில்லை. ஏனெனில், அந்நிறுவனங்கள் தங்கள் மருந்துகளின் பெரும்பகுதியை அமெரிக்காவிலேயே தயாரிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரிவிலக்கு உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இறக்குமதியாகும் மருந்துப் பொருள்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படவுள்ளது.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 15 விழுக்காடு இறக்குமதி வரிவிதிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், எப்போது அது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

ரோஷே, வோவார்ட்டிஸ், ஆஸ்ட்ராஸெனக்கா போன்ற பெரு நிறுவனங்கள். சுவிட்சர்லாந்து, பிரட்டன் போன்ற நாடுகளில் அவற்றின் மருந்துத் தயாரிப்பை மேற்கொள்கின்றன.

அந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இல்லை. எனவே அமெரிக்காவின் 100 விழுக்காடு வரியைத் தவிர்க்க, அந்நிறுவனங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு மாற்றி, அங்கு தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிடுகின்றன.

சிங்கப்பூர், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும், அமெரிக்கர்கள் சிறிய அளவில் உட்கொள்ளும் சில பிரபலமான மருந்துகளுக்கு ஆக அதிக வரி விதிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். டிரம்ப்பின் அந்த அறிவிப்பு, உள்நாட்டில் மருந்து உற்பத்தி பற்றி தெளிவுபடுத்தாத நிலையில் அடுத்த வாரம் அதிகாரபூர்வ விவரம் வெளியிடப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரட்டன் அந்நாடின் தேசிய சுகாதார சேவைக்காக வாங்கும் சில மருந்துகளுக்கு அதிகத் தொகையை வழங்க முன்வந்துள்ளதாகப் ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அது, டிரம்பை சற்று மனங்குளிரவைக்க எடுக்கப்படும் முயற்சி என்று கூறப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரின் மூத்த வர்த்தக ஆலோசகர் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் அச்செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்