லாரெடோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் திருவாட்டி நேய்டா அல்வரேசுக்கு ஐந்து நாள் கால அவகாசம் கொடுத்துள்ளது.
அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதிச் சுவர் தமது கொல்லைப்புறத்தில் கட்டப்படலாமா என்பது குறித்து அவர் முடிவெடுக்கவேண்டும்.
மறுத்தால், தமது வீடு கைப்பற்றப்படும் என்று திருவாட்டி நேய்டா கூறினார்.
திரு டிரம்ப் தற்போது டெக்சசின் லாரெடோ பகுதியைச் சுற்றியுள்ள எல்லையைக் குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
லாரெடோவில் உள்ள ஆற்றுக்கு அருகில் வீடுகள், பூங்காக்கள், சைக்கிளோட்டும் பாதைகள், மீன்பிடிக்கும் இடங்கள் ஆகியவை உள்ளன. தற்போது அங்குச் சுவர் ஏதுமில்லை.
இருப்பினும், பிப்ரவரி மாதத்தில், மத்திய அரசிடமிருந்து குறைந்தது 60 வீட்டு உரிமையாளர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஏஎஃப்பி செய்தி நிறுவனம், அமெரிக்கச் சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புத் துறையிடம் அவற்றைப் பற்றிக் கருத்துக் கேட்டது. ஆனால், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
மெக்சிகோவுடனான 3,000 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியின் சில இடங்களில் சுவர் கட்டுவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு டிரம்ப் அவரது முதல் தவணைக் காலத்தின்போது சில சுவர்களைக் கட்டியிருந்தார்.
புதிய திட்டத்தின்படி, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்வோரைப் பிடிக்க, சுவர் அல்லது அதற்கேற்ற நீர்த் தடுப்புகள், சுற்றுக்காவல் சாலைகள் ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

