தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

60 நிமிட நேர்காணலில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு

1 mins read
c67d7767-3f63-492f-b28d-e22b6cde92ef
முன்னதாக அழைப்பை ஏற்றுக் கொண்ட டிரம்ப், பின்னர் பின்வாங்கியிருக்கிறார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் 60 நிமிட தேர்தல் நேரடிப் பிரசார நேர்காணலில் பங்கேற்க மறுத்துவிட்டார் என்று சிபிஎஸ் நியூஸ் அக்டோபர் 1ஆம் தேதி தெரிவித்தது.

அடுத்த வாரம் சிறப்பு ஒளிபரப்பாக அந்த நேர்காணல் இடம்பெறவிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சிறப்பு தேர்தல் நிகழ்ச்சி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும். இந்த நேர்காணலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், அவருடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆளுநர் டிம் வால்ட்சும் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

நேர்காணலை நடத்தும் செய்தியாளரான ஸ்காட் பெல்லி, முன்னதாக டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.

ஆனால் டிரம்ப்பின் பிரசாரக்குழு இதில் பங்கேற்க வேண்டாம் என்று பின்னர் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டிரம்புக்கு விடுத்த அழைப்பு அப்படியே இருக்கும் என்று சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டது.

ஆரம்பத்தில் நேர்காணல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இன்னமும் திட்டமிடப்படவில்லை என்றும் டிரம்ப்பின் பேச்சாளர் ஸ்டீவன் சியுங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலுக்கு முன்பு வரும் வாரங்களில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் 60 நிமிட நேர்காணலில் பங்கேற்பது வழக்கம். டிரம்ப்பின் பிரசாரக் குழு முதலில் இதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டது என்று சிபிஎஸ் கூறியது.

வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து பார்வையாளர்களிடம் திரு பெல்லி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்