வாஷிங்டன்: தேர்தல் அதிகாரிகள் இறுதிக்கட்ட வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் அமெரிக்க மக்களவையில் சிறு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.
குடியரசுக் கட்சியினர் குறைந்தது 211 இடங்களைப் பிடித்துள்ளனர். பெரும்பான்மையைப் பெற இன்னும் ஏழு இடங்கள் தேவை.
செனட்டில் பெரும்பான்மையைப் பெற, குடியரசுக் கட்சியினர் குறைந்தது 53 இடங்களைப் பிடிக்க வேண்டும்.
அமெரிக்க சட்டமன்றத்தில், குடியரசுக் கட்சியினருக்கு முழு கட்டுப்பாடும் கிடைத்தால், குடியரசுக் கட்சியின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் டிரம்ப்புக்குப் பெரிதும் உறுதுணையாக அமையும்.
ஒப்புநோக்க, ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றால், டிரம்ப்புக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியும்.