இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.
அண்மைய ஆண்டுகளில் இஸ்தான்புல்லைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது என்று துருக்கி பேரிடர் உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து கட்டடங்களில் இருந்தவர்கள் பாதுகாப்புக் காரணம் கருதி சாலைகளுக்கு ஓடிவந்தனர்.
பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் கட்டடங்களுக்குள் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துருக்கியில் புதன்கிழமை (ஏப்ரல் 23) பொது விடுமுறை நாள்.
நிலநடுக்கத்தால் உயிருடற்சேதம், பொருட்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த உடனடித் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மீட்புப்பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

