வாஷிங்டன்: அமெரிக்காவின் சிபிஎஸ் ஊடகம், அந்நாட்டு எஃப் 15 ரக போர் விமானம் தென்ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதன் இரு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகளைக் குறிப்பிட்டு சனிக்கிழமை (ஏப்ரல் 4) செய்தி வெளியிட்டுள்ளது.
மற்றொரு விமானியைத் தேடும்பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை ஈரானின் அதிகாரபூர்வ ஊடகமும் உறுதிசெய்ததோடு காணாமல் போன விமானியை ஈரானிய ராணுவம் தேடுவதாக அறிவித்துள்ளது.
அதே வேளையில் வீழ்ந்த விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்ட மற்றொரு அமெரிக்க போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வட்டாரத்தில் முதலில் வீழ்ந்த விமானத்தைத் தேடிய ஏ-10 ரக போர் விமானம் சுட்டு விழ்த்தப்பட்டதை அமெரிக்க ஊடகம் உறுதி செய்தது. அதில் இருந்த விமானி தப்பித்துவிட்டதாகவும் பிறகு அவர் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

