இந்தோனீசிய வெள்ளத்தில் இருவர் மரணம்; பலரைக் காணவில்லை

1 mins read
99b3b262-337d-4934-a2d7-5d73c3c81d9a
இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் மாண்டதை அதிகாரிகள் உறுதிசெய்தனர். - படம்: இபிஏ

சிலாசாப், இந்தோனீசியா: இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் மாண்டதுடன் 21 பேரைக் காணவில்லை என்று பேரிடர் அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளனர்.

மத்திய ஜாவாவின் சிலாசாப் மாநிலத்தில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்தன. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணியாளர்கள் 23 பேரை உயிருடன் மீட்டனர். இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 21 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன என்றார் தேசியப் பேரிடர் அமைப்பின் பேச்சாளர் திரு அப்துல் முகாரி.

சிலாசாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
சிலாசாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. - படம்: ஏஎஃப்பி

மேடு பள்ளமான பாதை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாய் அவர் குறிப்பிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவ கனமான உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.

இவ்வாரத் தொடக்கத்தில் கடுமையான வானிலை குறித்து இந்தோனீசிய வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இனிவரும் வாரங்களில் இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று அது எச்சரித்தது.

நிலச்சரிவில் காணாமற்போனோரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
நிலச்சரிவில் காணாமற்போனோரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். - படம்: இபிஏ

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இந்தோனீசியாவில் பருவநிலைக் காலம் நீடிக்கும். அப்போது நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்படுவதோடு நீர் தொடர்பான நோய்களும் அதிகம் பரவும். நவம்பர் தொடக்கத்தில் பாப்புவா வட்டாரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளங்களாலும் நிலச்சரிவுகளாலும் குறைந்தது 15 பேர் மாண்டனர், 8 பேரைக் காணவில்லை.

தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்