தைவானை நெருங்கும் சம்பி சூறாவளி: விமானச் சேவை பாதிப்பு

தைவானை நெருங்கும் சம்பி சூறாவளி: விமானச் சேவை பாதிப்பு

படம்: ஏஎஃப்பி

22 Oct 2026 - 5:30 pm

1 mins read

தைபே: தைவானை நோக்கி வலிமையான சம்பி (Champi) சூறாவளி நெருங்கி வருவதால், அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளி தீவின் வடகிழக்குக் கரையை ஒட்டிச் சென்று படிப்படியாக வலிமை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் 2026ஆம் ஆண்டின் கடுமையான புயல்களில் ஒன்றான சம்பி சற்று வலுவிழந்தாலும், மையப்பகுதியில் மணிக்கு 227 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாகத் தைவான் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பி சூறாவளி வடகிழக்குத் தைவானைக் கடந்து, சீனக் கடலோரப் பகுதி வழியாக ஜப்பானை நோக்கி நகரும். இதன் தாக்கம் இரண்டு நாள்கள் வரை நீடிக்கலாம்.

பொதுமக்கள் மலை, கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகர் தைப்பே உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 1 மீட்டர் வரை மழையும், கடலோரப் பகுதிகளில் 6 மீட்டருக்கும் அதிகமான அலைகளும் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தைவானில் 125 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், ரயில் போக்குவரத்து இதுவரை பாதிக்கப்படவில்லை. மக்களை வெளியேற்றும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

அதேபோல், ஜப்பானில் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 11,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்