தைபே: ஃபங்-வோங் சூறாவளி புதன்கிழமையன்று (நவம்பர் 12) தைவானைத் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி வலுவிழந்ததாகக் கூறப்பட்டாலும், மலைப்பாங்கான கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கரையோரப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும் கூறப்படுகிறது.
தீவின் பெரும்பாலான தெற்குப் பகுதிகளில் வர்த்தகங்களும் பள்ளிகளும் மூடப்பட்டன.
அப்பகுதிகளில், ஃபங் - வோங் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 51 பேர் காயமடைந்தனர்.
யீலானின் (Yilan) சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்களில் காண முடிந்தது.
அப்பகுதியில் கழுத்து அளவுக்கு நீர் தேங்கியிருப்பதாகவும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் படை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஹுவாலியென் பகுதியில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளியில் 18 பேர் மாண்டனர்.

