ஹனோய்: வியட்னாமியத் தலைநகர் ஹனோயை உலுக்கிய பிறகு செப்டம்பர் 8ஆம் தேதியன்று ‘யாகி’ புயல் வலுவிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஹனோயில் குறைந்தது மூவர் மாண்டனர்.
ஹனோயில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்ததுடன் பல வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், புயல் வலுவிழந்துள்ளபோதிலும் வியட்னாமின் வடக்குப் பகுதியில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு தொடரும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘யாகி’ புயல் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியன்று வியட்னாமின் வடக்குப் பகுதி கரையைக் கடந்தது.
இதில் குறைந்தது ஏழு பேர் மாண்டதுடன் பலர் காயமடைந்தனர்.
புயல் வலுவிழந்துள்ள நிலையில் ஹனோயின் ‘நோய் பா’ அனைத்துலக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.
‘யாகி’ புயல் காரணமாக வியட்னாமின் கடலோரப் பகுதிகளில் அலைகள் நான்கு மீட்டர் வரையிலான உயரத்துக்கு எழுந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடலில் மாயமானோரைத் தேடும் பணிகள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ளவர்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.