தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று வார அரசியல் சோதனையை எதிர்நோக்கும் ரிஷி சுனக்

2 mins read
c168a48b-9101-4949-8b6a-604c932d33b2
பிரதமர் ரிஷி சுனக் அவரது தலைமைத்துவத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சோதனையை எதிர்நோக்குகிறார். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அவரது தலைமைத்துவத்திலும், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிகாண்பதற்கான வாய்ப்புகளிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று வார அரசியல் சோதனையை எதிர்நோக்குகிறார்.

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி இடம்பெறாது. இருப்பினும், அதே நாளன்று திரு சுனக்கின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மூன்று நாடாளுமன்ற இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகிறது. கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

நல்ல முடிவுகள் பிரதமருக்கு முக்கிய உந்துதலைக் கொடுக்கும் என்றும் 2024ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியுறக்கூடும் என்ற முன்னுரைப்புகளை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரும் வாரங்களில் திரு சுனக்கிற்கு வேறு சில உத்தேச சோதனைகள் அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரபூர்வ வருகை, மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க திரு சுனக் கொடுத்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருக்கும் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள், பிரான்சிலிருந்து படகுகள் மூலம் அடைக்கலம் நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்கள், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையை மாற்றக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திரு சுனக்கின் கட்சி, திரு கேர் ஸ்டார்மரின் எதிர்த்தரப்பு தொழிலாளர் கட்சியைவிட 22 புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கியிருப்பதால், திரு சுனக் தற்போது நெருக்குதலை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்