காஸா போர் நிறுத்தம்: ஐநா வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு

காஸா போர் நிறுத்தம்: ஐநா வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு

1 mins read
2710218f-9a4e-4dd6-9288-47d56b9a0a1f
தெற்கு காசா பகுதியில் உள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையால் தகர்க்கப்பட்ட வீடுகளுக்கு அருகே பாலஸ்தீனப் பெண் ஒருவர் செல்கிறார். - படம்: இபிஏ - இஎஃப்இ

காஸா: இஸ்ரேல்- ஹமாஸ் போரை உடனடியாக மனிதநேய அடிப்படையில் நிறுத்துவது குறித்து ஐக்கிய நாட்டுச் சபை(ஐநா) பாதுகாப்பு மன்றத்தில் வாக்கெடுப்பு வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், அல்ஜீரியா, போர் நிறுத்தத்திற்கான வரைவுத் தீர்மானம் ஒன்றை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாட்டுச் சபை பாதுகாப்பு மன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அதனையடுத்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீர்மானத்தை நிறைவேற்ற 15 நாடுகளின் ஆதரவு தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“இந்த வரைவு தீர்மானத்தின் மீதான நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்த வரைவு வாக்கெடுப்புக்கு வந்தால், ஏற்றுக்கொள்ளப்படாது” என ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் திருவாட்டி தாமஸ்-கிரீன்ஃபீல்ட் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்