பெட்டாலிங் ஜெயா: இவ்வாண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் போட்டியிடும் மலேசிய அழகியின் தேசிய ஆடை குறித்து மலேசியர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
சிலர் அதைப் பாராட்டுகின்றனர்.
ஆனால் சிலர் அதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று மெக்சிகோ சிட்டியில் பிரபஞ்ச அழகிப் போட்டி 2024 நடைபெறுகிறது.
இதில் மலேசியா சார்பாக சாண்ட்ரா லிம் போட்டியிடுகிறார்.
போட்டியின் தேசிய ஆடைகள் அங்கத்தின்போது அவர் பாகாங் மாநிலத்தின் மலாய் நாட்டுப்புறக் கதையில் வரும் வீராங்கனை வாலினோங் சாரி அணியும் ஆடையைப் போலவே ஆடை அணிய இருக்கிறார்.
சிலர் இந்த முடிவைப் பாராட்டுகின்றனர்.
ஆடை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது மிகவும் எளிமையாக இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் சிலருக்கு அந்த ஆடையை அறவே பிடிக்கவில்லை.
அது பார்ப்பதற்கு மூர்க்கத்தனமாக இருப்பதாக அவர்கள் தங்கள் கருத்துகளை சமூக ஊடகம் வாயிலாக முன்வைத்துள்ளனர்.

