ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகம் ஒன்று மாறுபட்ட திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாறுபட்ட உத்தியைக் கையாண்டுள்ளது.
இடைக்கால விடுமுறையின்போது மாணவர்கள் அனைவரையும் காதலிக்கும்படி சிசுவான் சவுத்வெஸ்ட் விமானப் போக்குவரத்துத் தொழிற்கல்லூரி அதன் அதிகாரத்துவ ‘வீசேட்’ (Wechat) செயலியில் தெரிவித்தது.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதி வரை ‘மலர்களைக் காணுங்கள், அன்பின் நெருக்கத்தை அனுபவியுங்கள்’ (See the flowers and enjoy romance) என்ற கருப்பொருளைப் பல்கலைக்கழகம் முன்வைத்துள்ளது.
கோடைக்காலத்திலும் பனிக்காலத்திலும் வழக்கமாக வரும் விடுமுறையுடன் சேர்த்து இலையுதிர்க் காலத்திலும் வசந்தகாலத்திலும் பள்ளி விடுமுறைகளைச் சீனா இரண்டு வாரங்களுக்குமுன் அறிவித்தது.
அதையடுத்து சிச்சுவான் சவுத்வெஸ்ட் பல்கலைக்கழகம், மாணவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்களை ஓரங்கட்டும்படி அறிவுறுத்தியது.
சுற்றுபயணங்கள் அதிகம் இல்லாத காலங்களில் பயணம் செய்ய விடுப்பு எடுக்கும்படியும் அதிகாரிகள் ஊழியர்களை ஊக்குவிக்கின்றனர்.
சீனா, உள்ளூர்வாசிகளின் பயணங்களையும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் அதிகரிக்க முற்பட்டுள்ளது.
ஊழியர்களுக்குக் கூடுதல் பொழுதுபோக்கு நேரம் வழங்கும்போது மக்கள்தொகையைத் தொடர்ந்து கட்டிக்காக்க பிள்ளைப் பிறப்பு விகிதமும் அதிகரிக்கும் என்று சீனா நம்புகிறது.
கடந்த ஆண்டு பதிவான சீனாவின் மக்கள்தொகை, நான்காவது ஆண்டாகத் தொடர்ந்து இறக்கம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் மக்கள்தொகை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்தது. அது இன்னும் குறையலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரிய குடும்பங்களை உருவாக்குவதன் சமூக, தனிப்பட்ட நன்மைகள் குறித்து இளையர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இன்னும் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் நிபுணர்கள் தெரிவித்தனர்.
பிள்ளைப் பெறுவதற்கு சீன அரசாங்கமும் கூடுதல் வளங்களை ஒதுக்கத் திட்டமிடுகிறது.

