இயந்திர மனிதர்கள் செயல்படும் ஆளில்லா ஆய்வுக்கூடம்

இயந்திர மனிதர்கள் செயல்படும் ஆளில்லா ஆய்வுக்கூடம்

1 mins read
189d5a55-0055-4fec-88f6-167f56ca8f05
தோக்கியோ யூஷிமா வளாகத்தில் உள்ள ரோபோடிக்ஸ் புத்தாக்க நிலையம். - படம்: தோக்கியோ அறிவியல் கழகத்தின் இன்ஸ்டகிராம்.

தோக்கியோ: ஜப்பானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பல்கலைக்கழகம் ஒன்று, ஆளில்லா ஆய்வுக்கூடத்தை நிறுவியுள்ளது. அங்கு மனிதர்களுக்குப் பதிலாக இயந்திர மனிதர்கள் சோதனைகளை நடத்துவர்.

ஆய்வுக்கூடத்தை முழுமையாக தானியக்கமாக்கும் நோக்கத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

ரோபோடிக்ஸ் புத்தாக்க மையம் எனும் தோக்கியோ யூஷிமா வளாகத்தில் உள்ள அறிவியல் கழகத்தில் மஹோலோ லேப்டிராய்ட் என்று அழைக்கப்படும் மனித உருவம் கொண்ட பத்து ரோபோக்கள் செயல்படுகின்றன. இங்கு மனித ஊழியர்கள் யாரும் இல்லை.

செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட தானியக்க முறையை படிப்படியாக அதிகப்படுத்த பல்கலைக்கழகம் விரும்புகிறது.

இரண்டு கைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அளவு வினைபொருள்களை மாற்றுவது, வெப்பக் கட்டுப்பாடு உள்ள அறையின் கதவைத் திறந்து உபகரணங்களை வைப்பது அல்லது எடுப்பது போன்ற நுட்பமான பணிகளில் இயந்திர மனிதர்கள் ஈடுபடுவர்.

தானியக்க முறையில் உயிரணுக்களை வளர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டுவாக்கில் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கையை 2,000க்கு அதிகரிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதனால் சோதனைகளைச் சரிபார்ப்பது முதல் செயல்பாடுகளைக் கண்காணித்து தீர்வுகள் கண்டறிவது வரையிலான அனைத்து ஆய்வுப் பணிகளையும் இயந்திரங்கள் மேற்கொள்ளும்.

“உலகிலேயே ஜப்பானிய அறிவியல் ஆய்வு தலைசிறந்ததாக இருக்க விரும்புகிறோம்,” என்று அந்த ஆய்வு நிலையத்தின் தலைவரான கெய்ச்சி நாகாயாமா தெரிவித்தார்.

ஏப்ரல் மத்தியில் நடைபெற்ற திறப்பு விழாவில் பேசிய அவர், தங்களுடைய இலக்குகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதர்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்