புதிய அறைகலன்களுக்கு US$43,000 செலவிட அமெரிக்கக் கல்வி அமைச்சர் திட்டம்

புதிய அறைகலன்களுக்கு US$43,000 செலவிட அமெரிக்கக் கல்வி அமைச்சர் திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

29 Oct 2026 - 5:20 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்கக் கல்வி அமைச்சை மூடக் கோரி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வரும் அந்நாட்டின் கல்வி அமைச்சர் லிண்டா மெக்மஹான், தமது அரசு அலுவலகத்திற்குப் புதிய அறைகலன்களை வாங்க US$43,000 (S$55,000) செலவிடத் திட்டமிட்டுள்ளார்.

தற்போதைய அறைகலன்கள் தேய்மானமடைந்து உள்ளதாகவும் அமைச்சின் புதிய அலுவலக இடத்திற்கு அவை பொருத்தமாக இருக்காது என்றும் மெக்மஹான் தரப்பு நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது.

புதிய மேசை, மாநாட்டு மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

தென்மேற்கு வாஷிங்டனில் 1961 முதல் இயங்கிவந்த ஏழு மாடிக் கட்டடத்திலிருந்து அலுவலகத்தை மாற்றப்போவதாக திருவாட்டி மெக்மஹான் மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

புதிதாக மாற்றப்படும் அலுவலகம், 2025ல் மூடப்பட்ட கட்டடத்தில் அமையவுள்ளது. இம்மாற்றம் மூலம் ஆண்டுக்கு $5 மில்லியன் மிச்சமாகும் என அவர் கூறினார்.

இதற்கிடையே, வீணான இந்தச் செலவை மறுபரிசீலனை செய்யுமாறு செனட்டர்கள் அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்