வாஷிங்டன்: டோனல்ட் டிரம்ப்பின் மகன் பேர்ரன் டிரம்ப் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்று தமது தந்தைக்கு வாக்களித்துள்ளார்.
இந்த விவரத்தை பேர்ரன் டிரம்ப்பின் தாயார் தேர்தல் நாளன்று வெளியிட்டார்.
டோனல்ட் டிரம்ப்பின் மனைவியானமெலானியா டிரம்ப், பேர்ரன் டிரம்ப் வாக்களிக்கும் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில், 18 வயது பேர்ரன் டிரம்ப் தந்தைக்காக வாக்களிக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டில் டோனல்ட் டிரம்ப் அதிபரானபோது பேர்ரனுக்கு வயது பத்து. மெலானியா டிரம்ப்பின் ஒரே மகன் பேர்ரன் டிரம்ப்.