வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்நாட்டுக் கப்பல் படைக்குப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தமது படையைக் கொண்டு சுற்றிவளைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்மூலம் எந்தக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையவோ வெளியேறவோ முடியாது என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
“பாகிஸ்தானில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பல மணி நேரப் பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. பல கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் அணுவாயுதம் தொடர்பான கோரிக்கையை ஈரான் மறுத்துவிட்டது,” என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

