அமெரிக்காவின் அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது

1 mins read
8494568b-0908-4a89-b365-3f0ae04d122d
குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

வாஷிங்டன்: அரசாங்கத்துக்கு நிதி ஒதுக்குவதில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டில் தீர்வு ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் மீண்டும் செயல்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் 40 நாள்களாக முடங்கியிருக்கிறது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. விமானச் சேவைகள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்ய செனட் சபை தயாராகி வருகிறது.

நவம்பர் 9ஆம் தேதி இரவு செனட்டர்கள் இந்த மசோதா மீது வாக்களிக்கவிருக்கின்றனர்.

ஜனவரி 2026 வரை அரசாங்கத்திற்கு நிதியளிக்கும் குறுகிய கால நிதி நடவடிக்கைக்கு மசோதா வகை செய்கிறது.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் மசோதா நிறைவேறுவதற்கு குறைந்தது எட்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜனநாயகக் கட்சியும் இதற்கு ஆதரவளிக்கும் என்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

திருத்தப்பட்ட மசோதா, பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலைப் பெற்று அமெரிக்க அதிபரின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு சில நாள்கள் தேவைப்படும்.

ஜனநாயகக் கட்சியினருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், கட்டுப்படியாகும் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் மானியங்களை நீட்டிப்பது குறித்து டிசம்பரில் வாக்களிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொள்வார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் நிதி ஒதுக்குவதில் இழுபறி நீடித்தது.

குறிப்புச் சொற்கள்