சீன நிறுவனங்கள் ‘ராணுவ’ நிறுவனங்கள் என்ற அமெரிக்கா: சாடிய பெய்ஜிங்

சீன நிறுவனங்கள் ‘ராணுவ’ நிறுவனங்கள் என்ற அமெரிக்கா: சாடிய பெய்ஜிங்

1 mins read
d14b484c-f2c5-481b-8be0-a579dd089ec3
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை ஆதரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் அலிபாபா, பைடு, பிஒய்டி ஆகிய மிகப் பெரிய சீன நிறுவனங்களை அமெரிக்கா சேர்த்தது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீன நிறுவனங்களை ‘ராணுவ நிறுவனங்கள்’ என்று வகைப்படுத்தும் அமெரிக்காவின் தீர்மானத்தைச் சீன வர்த்தக அமைச்சு சாடியுள்ளது.

சீன நிறுவனங்களின் வளர்ச்சியை முடக்க, தேசியப் பாதுகாப்பை அமெரிக்கா முன்னிறுத்துவதாக அது குறிப்பிட்டது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை ஆதரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் அலிபாபா, பைடு, பிஒய்டி ஆகிய மிகப் பெரிய நிறுவனங்களைக் கடந்த வாரம் சேர்த்தது.

அதனால், சீன வர்த்தக அமைச்சு பெரிதும் அதிருப்தியடைந்துள்ளது.

அமெரிக்காவின் அந்தச் செயல், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக உறவைப் புறக்கணிப்பதுடன் அனைத்துலகப் பொருளியல் ஒழுங்கைச் சீர்குலைப்பதாக அமைச்சு சாடியது.

மேலும், விநியோகத் தொடர்களையும் சீன நிறுவனங்களின் உரிமைகளையும் அமெரிக்காவின் முடிவு பாதிப்பதாக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்கா அதன் தீர்மானத்தை உடனடியாக மீட்டுக்கொள்ளவேண்டும் என்றும் நியாயமான, பாரபட்சம் இல்லாத முறையில் நிறுவனங்களை நடத்தவேண்டும் என்றும் சீனா கேட்டுக்கொண்டது.

இல்லாவிடில், உறுதியான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது எச்சரிக்கை விடுத்தது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசீனாநிறுவனம்