இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள்

இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள்

1 mins read
be1a7136-8010-40cf-84ae-44e74ccc8d31
ஏப்ரல் 12ஆம் தேதி ஓமானின் முசந்தம் வட்டாரக் கடற்கரையைக் கடந்து, ஹார்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: ஈரானியக் கச்சா எண்ணெய் கொண்ட இரு பெரிய சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு ஈரானிய எண்ணெய்யுடன் கப்பல் வந்திருப்பது இதுவே முதல்முறை

அமெரிக்காவின் தடைகள் காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திவிட்டது.

இருப்பினும், மத்திய கிழக்குப் போரினால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாக, ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய மார்ச் மாதம் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகத் தெரிவித்திருந்தது.

அமைதிப் பேச்சுகள் உடன்பாடின்றி முறிந்ததைத் தொடர்ந்து, ஈரானியச் சரக்குக் கப்பல்களை முடக்கும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அவரின் அத்திட்டம் ஏற்கெனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கையோ தற்போதைய கொள்முதல்களையோ எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்