அமெரிக்க-தென்கொரிய ராணுவப் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

அமெரிக்க-தென்கொரிய ராணுவப் பயிற்சி: வடகொரியா கடும் எச்சரிக்கை

படம்: ராய்ட்டர்ஸ்

02 Nov 2026 - 9:42 pm

1 mins read

பியோங்யாங்: அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சி, தங்களைத் தாக்கும் நோக்கம் கொண்ட அணு ஆயுதப் போர் ஒத்திகை என வடகொரியா சாடியுள்ளது.

இதனால், தனது அணு ஆயுதத் தடுப்பாற்றலை விரைவுபடுத்தப்போவதாகவும் அந்நாடு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் துணைத்துறை இயக்குநர் கிம் ஜோங் சிக், ‘அயர்ன் மேஸ்’ எனும் அப்பயிற்சி வடகொரியாவை அணு ஆயுதங்களால் ஒடுக்கும் அமெரிக்காவின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.

அதனால், அணு ஆயுதப் படைகளைத் தீவிரமாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் அணு ஆயுதத் திறனையும் தென்கொரியாவின் ராணுவப் பலத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை அப்பயிற்சி நடைபெற்றது.

செப்டம்பரில் எல்லையில் நடந்த கண்ணிவெடி விபத்தை அடுத்து தென்கொரியா - வடகொரியா இடையே பதற்றம் அதிகரித்தது.

தெற்கு நோக்கி ஒலிபெருக்கி பிரசாரத்தை மீண்டும் தொடங்கப்போவதாக வடகொரியா அச்சுறுத்தியிருந்தது.

ஆனால், வடகொரியா தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தியதற்கான உறுதியான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை எனத் தென்கொரிய ராணுவத் தரப்பு திங்கட்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாதென்கொரியாஅமெரிக்காராணுவப் பயிற்சி