தைவானைக் கைவிடப்போவதில்லை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ

1 mins read
7ebfc3b7-d175-45bd-899c-a0cf3a9dc679
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் மார்க்கோ ரூபியோ - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெரூசலம்: சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதற்காகத் தைவானைக் கைவிடப்போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் திரு டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கைத் தென்கொரியாவில் நடைபெறும் உச்சநிலைக் கூட்டத்தில் சந்திக்கவுள்ளார். சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை எட்டவும் திரு டிரம்ப் முனைப்புடன் இருக்கிறார்.

“தைவான் தரப்பில் கவலை உணரப்படுகிறது. அதில் நியாயம் உள்ளது, அவர்களது சூழ்நிலை அப்படி,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தைவானைக் கைவிடுவதற்குக் கைம்மாறாக சீனாவிடமிருந்து அமெரிக்கா கூடுதல் வர்த்தக அனுகூலங்களைப் பெறுமா என மக்கள் கவலைப்படவேண்டம் என்று திரு ரூபியோ, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்காதபோதும் தைவானின் தற்காப்புக்காக அமெரிக்கா, ஆயுதங்களை வழங்குகிறது. 

தைவான், ஜனநாயக முறைப்படி தன்னை ஆட்சிசெய்தாலும் சீனா, அதனைத் தனது சொந்த மாநிலமாகக் கருதுகிறது.

தைவான் குறித்து திரு டிரம்ப் இருமனதுடன் இருப்பதாகச் சில கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அத்துடன், தைவான்மீது சீனா படையெடுப்பு நடத்தாது எனத் தாம் நம்புவதாகத் திரு டிரம்ப அண்மையில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்