நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) வாஷிங்டனில் சந்திப்பதற்கு முன்பாக, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய மூன்று நாடுகளுக்கான ஆதரவு தொடரும் என்று திங்கட்கிழமை அமெரிக்கா மறுவுறுதிப்படுத்தியது.
இருநாட்டு மாநாட்டில் சீனா உடனான உறவில், குறிப்பாக, தைவான் விவகாரத்திலும் வர்த்தகக் கொள்கையிலும் அமெரிக்கா அதன் நிலைப்பாட்டைத் தளர்த்திவிடும் சாத்தியங்கள் உள்ளதென நட்பு நாடுகள் அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நியூயார்க் நகரில் நடந்துவரும் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் தென்கொரிய, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசினர். அதில் அதிபர் டிரம்ப்பை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நேரடியாகப் பார்த்துப் பேச விரும்பும் எண்ணத்தை அவர்கள் முன்வைத்தனர்.
அதே நாளில் அமெரிக்க அதிபர் உட்பட ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டொஷிமிட்சு மொட்டெகி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சொ ஹுயுன் இருவரும் ஐநா சபையில் உரையாற்றவுள்ளனர்.
