சைவ உணவு உட்கொள்வோருக்குப் புற்றுநோய் அபாயம் குறைவு

சைவ உணவு உட்கொள்வோருக்குப் புற்றுநோய் அபாயம் குறைவு

1 mins read
இது வீகன் உணவு உட்கொள்வோருக்குப் பொருந்தாது
08a0f57a-b755-4a0a-b05a-08eb2b31f5e9
புதிய ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. - படம்: அடோபி ஸ்டாக்

லண்டன்: சைவ உணவு உட்கொள்வோருக்குப் பலவகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் குறைவு என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மார்பக, ஆண்சுரப்பி உள்ளிட்டப் புற்றுநோய் வகைகள் அவற்றில் அடங்கும்.

அதேவேளை, ‘வீகன்’ உணவை உட்கொள்வோருக்கு இது பொருந்தாது என்றும் தெரிய வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ‘வீகன்’ எனப்படும் பால் வசை உணவு வகைகளையும் உண்ணா சைவ உணவு உட்கொள்வோரிடையே மலக்குடல் (colon) புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரிட்டி‌ஷ் ஜர்னல் ஆஃப் கேன்சர்’ எனப்படும் பிட்டி‌ஷ் புற்றுநோய் சஞ்சிகை, முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டது. மூன்று கண்டங்களிலிருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமானோரைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் அமெரிக்க ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் சில மாற்றங்களைச் செய்தது. அவை, இறைச்சி சார்ந்த புரதச் சத்தில் கவனம் செலுத்துகின்றன.

பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும் சமைக்கப்படாத உணவு (ultra-processed food) குறித்து கவலைகள் அமெரிக்காவிலும் உலகளவிலும் நிலவுகின்றன. இத்தகைய உணவு வகைகளை ஆய்வு ஆராயவில்லை.

மாற்றம் செய்யப்பட்ட இறைச்சி உட்கொள்ளாமல் பழங்கள், காய்கறி, நார்சத்து ஆகியவற்றை அதிகம் உண்போரிடையே புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும், இறைச்சி, பால் வகைகளை உண்ணாதோருக்குப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலும் தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்