தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசா இல்லாப் பயணத்தை மேலும் ஐந்தாண்டுக்கு நீட்டிக்கும் மலேசியா, சீனா

1 mins read
70df0475-75ee-45ef-90ed-91f3983fd17b
மலேசியாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து மலேசியாவுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகள் விசா இன்றி பயணம் செய்யலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்ரஜெயா: சீனாவிலிருந்து மலேசியாவுக்கு விசா இன்றி பயணம் செய்யும் நடைமுறை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியப் பயணிகளும் விசா இன்றி சீனாவுக்குச் செல்ல முடியும்.

நடப்பிலிருக்கும் விசா இல்லாப் பயண நடைமுறையை மலேசியாவும் சீனாவும் நீட்டிப்பது தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியலுக்கு நன்மை தரும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் ஏப்ரல் 16ஆம் தேதி மலேசியா சென்றிருந்தபோது புதிய இருதரப்பு ஒப்பந்தத்துடன் மொத்தம் 31 இணக்கக் குறிப்புகளும் கையெழுத்தாயின.

அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று புதிய விசா நடைமுறை.

“அதைக் கூடுதலாக ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டோம். அது முடிந்த பிறகு மீண்டும் ஐந்தாண்டுக்கு நீட்டிப்பதற்கான வாய்ப்புக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது,” என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்தார்.

விசா இல்லாத நடைமுறையால் சீனப் பயணிகள் 90 நாள்கள்வரை மலேசியாவில் தங்க முடியும். அதே போன்ற ஏற்பாட்டை மலேசியர்களுக்கும் சீனா வழங்கியுள்ளது என்றார் அவர்.

அந்த நடைமுறை பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்ற திரு சைஃபுடின், சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாத நிலவரப்படி இவ்வாண்டு இதுவரை 900,000 சுற்றுப்பயணிகள் சீனாவிலிருந்து மலேசியா சென்றுள்ளனர்.

அது, விசா இல்லா நடைமுறையைத் தொடர மலேசிய அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது என்று திரு சைஃபுடின் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்