பேங்காக்: தாய்லாந்தின் சாஆம் மாவட்டத்தில் உள்ள நொங் போ மற்றும் நொங் காங் கிராமங்களை நீர்த்தாரை புரட்டிப் போட்டது. சுழல் காற்றினால் பரந்த நீர்ப்பரப்பிலிருந்து நீர், சூழல்போல் மேலெழும்பி விழுவது நீர்த்தாரை எனப்படும்.
இதில் கூரைகளும் விளம்பரப் பலகை பெயர்ந்து விழுந்தன.
அருகில் உள்ள வீடுகளின் மீது அவை விழுந்ததில் அந்த வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. அப்பகுதிகளில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
கனமழை, பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
காயமடைந்தோர், உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.
அந்த இடங்கள் எந்த அளவுக்குச் சேதமடைந்துள்ளன என்பதை மதிப்பீடு செய்ய அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோருக்கு அவர்கள் உதவி வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மட்டுமின்றி வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

