சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ராணுவக் கிடங்கைத் தாக்கினோம்: அமெரிக்க ராணுவம்

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ராணுவக் கிடங்கைத் தாக்கினோம்: அமெரிக்க ராணுவம்

1 mins read
67c12265-67c7-4c0f-b85c-747d1552ef6a
நவம்பர் ஏழாம் தேதியன்று சிரியாவின் ஹோர்ன்ஸ் நகரில் காணப்பட்ட சேதமடைந்த கட்டடங்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌‌ஷிங்டன்: சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்படும் ராணுவ அமைப்பின் ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 12) தெரிவித்தது.

“‌இது, ஷதாதி சுற்றுக்காவல் தளத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கான பதிலடியாகும். அந்தத் தாக்குதலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான நிலையங்களுக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அமெரிக்கப் படையினர், அதன் பங்காளிகளின் படையினர் யாரும் காயமடையவில்லை,” என அறிக்கை ஒன்றில் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காசிரியாதாக்குதல்ஈரான்