பஹ்ரேனில் அமெரிக்க ரேடார் முறையைக் குறிவைத்தோம்: ஈரானிய புரட்சிக் காவற்படை

பஹ்ரேனில் அமெரிக்க ரேடார் முறையைக் குறிவைத்தோம்: ஈரானிய புரட்சிக் காவற்படை

படம்: ராய்ட்டர்ஸ்

13 Nov 2026 - 7:36 pm

1 mins read

டெஹ்ரான்: பஹ்ரேனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை முறையைத் தங்கள் படைகள் குறிவைத்ததாக ஈரானிய புரட்சிக் காவற்படை வீரர்கள் கூறியதாக அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தது.

பஹ்ரேன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மனாமாவோ வா‌ஷிங்டனோ உறுதிப்படுத்தவில்லை. எட்டு மாதங்களாக நீடித்துள்ள ஈரான் போரில் மத்திய கிழக்கு நாடுகளின் தளங்களும் சாதனங்களும் குறிவைக்கப்பட்டன.

“இஸ்லாமிய புரட்சிப் படையின் (ஐஆர்ஜிசி) விமானத் துறைப் படை வீரர்கள் பஹ்ரேன் தீவில் உள்ள வலிந்து தாக்குதலில் ஈடுபடும் அமெரிக்காவின் முன்கூட்டிய ரேடார் எச்சரிக்கை முறையைக் குறிவைத்து அழித்தனர். சிரிக் நகரில் உள்ள தொலைத்தொடர்புக் கட்டடத்தின்மீது எதிரிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடியாகும்,” என்று ஈரானிய புரட்சிக் காவற்படை அறிக்கை மூலம் தெரிவித்தது. சிரிக், தென் ஈரானில் உள்ள துறைமுக நகராகும்.

“இது, ஆகாயம்வழி சீண்டும் நடவடிக்கைகளையும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கடத்தலையும் நிறுத்திக்கொள்ளுமாறு வலிந்து தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாகும்,” என்று ஈரானிய புரட்சிக் காவற்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டது. ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் அதன் டெலிகிராம் பக்கத்தில் அந்த அறிக்கையை வெளியிட்டது.

அவ்வட்டாரத்தில் ராணுவ நடவடிக்கைகளைக் கவனித்துவரும் அமெரிக்க மத்திய தளபத்தியம், கோடைக்காலத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1.5 பில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய்யை ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்றுமதி செய்ய உதவியதாகக் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்பஹ்ரேன்மத்திய கிழக்குதாக்குதல்அமெரிக்கா