தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவின் நண்பர்களாக இருக்க விரும்புகிறோம்: சீனத் தூதர்

1 mins read
1a62cfd0-c37f-43b9-851f-17a3d321d0ff
அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஸி ஃபெங். - படம்: ராய்ட்டர்ஸ்

ஷாங்காய்: அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டோனல்ட் டிரம்ப் ஜனவரியில் பொறுப்பு ஏற்கவிருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பங்காளியாகவும் நண்பராகவும் இருக்க சீனா விரும்புகிறது என்று அமெரிக்காவுக்கான சீன தூதர் ஸி ஃபெங் கூறியுள்ளார்.

இரு பெரும் பொருளியல் நாடுகளான சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் உறவை வலுப்படுத்தும் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“அமெரிக்காவை மிஞ்சவோ அல்லது மாற்றவோ சீனாவிடம் எந்தத் திட்டமும் இல்லை,” என்று நவம்பர் 15 ஹாங்காங்கில் சீன அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான அமெரிக்க தூதர்களிடம் உரையாற்றிய திரு ஸி ஃபெங் குறிப்பிட்டார்.

டோனால்ட் டிரம்ப் ஜனவரியில் அதிபராகத் திரும்புவதற்கு முன்பு வாஷிங்டனுடனான உறவுகளை சீர்படுத்த பெய்ஜிங் விரும்புகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பொருளியல் உலகமயமாகி வரும் வேளையில் தன்னைப்பேணித்தனத்தை நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் நவம்பர் 15 அன்று அழைப்பு விடுத்திருந்தார்.

சீனாவும் அமெரிக்கவும் வர்த்தகம், விவசாயம், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றும் பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறிய திரு ஸி, இரு நாடுகளும் வெளிப்படையாக பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே மோதல் மற்றும் மோதலுக்கு வழிவகுக்கும் முக்கிய விவகாரம் ‘தைவான்’ என்பதை திரு ஸி சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்