பெய்ஜிங்: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க ரஷ்யாவுடன் ஒத்துழைக்கப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தில் இருநாடுகளும் அந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவிடம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உடனடி சண்டை நிறுத்தமே ஹோர்முஸ் நீரிணையில் பதற்றத்தை தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு என்ற சீன அமைச்சர், எந்தவிதமான தீவிர பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையை சீனா வலியுறுத்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்ற சந்திப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சீனாவின் இந்த நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பஹ்ரைன் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் பாதுகாப்பு குறித்த தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது.

