பிள்ளைகளுக்கு அனைத்துலகப் பள்ளிகளை நாடும் இந்தியச் செல்வந்தர்கள்

பிள்ளைகளுக்கு அனைத்துலகப் பள்ளிகளை நாடும் இந்தியச் செல்வந்தர்கள்

1 mins read
தரமான கல்வியுடன் அனுபவமும் கிட்டும் என்று பெற்றோர் நம்புகின்றனர்
4decef9a-960b-4720-9b06-26bec79a49fd
குருகிராம் நகரில் உள்ள குவீன் எலிசபெத் பள்ளியில் நடந்த கண்காட்சியில் பெற்றோர்கள் விவரங்களைப் பெறுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: தேர்வுகளை மையமாகக்கொண்ட பாரம்பரிய இந்தியப் பள்ளிகளைத் தவிர்த்து, பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குப் புதிய அனுபவங்களை வழங்கும் அனைத்துலகப் பள்ளிகளை நாடும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு முடிவெடிக்கும் பெற்றோர்கள் பொதுவாக நல்ல வசதியும் செல்வமும் படைத்தவர்கள்.

வடஇந்திய மாநிலமான ஹரியானாவின் பானிபட் நகரைச் சேர்ந்த திருவாட்டி நேகா அகர்வால் அத்தகையோரில் ஒருவர்.

அவரது 10 வயது மகன் உள்ளூர்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயின்றாலும் கல்வியில் அதிக கவனம் செலுத்தாமல் சோர்வாக இருப்பது அவருக்கு மனவுளச்சலை ஏற்படுத்தியது.

பாடங்களை மனப்பாடம் செய்வது, தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவது போன்ற அடிப்படையான இலக்குகளுடன் இந்தியப் பள்ளிகள் செயல்படுகின்றன.

எனவே, மகனை அனைத்துலக இளங்கலைப் பட்டம் அல்லது கேம்பிரிட்ஜ் கல்வி நிலையத்தின் உலக அளவில் மதிக்கப்படும் கல்வித் திட்டத்தில் இணைக்க திருவாட்டி நேகா முடிவெடுத்துள்ளார்.

வாரம் ஐந்து நாள்கள் அனைத்துலகப் பள்ளியில் தங்கியிருந்து பயின்று வார இறுதியில் வீடு திரும்பும் திட்டத்தை அவர் தம் மகனுக்கு வழங்க விரும்புகிறார். அதன்வழி மகனுக்குக் கல்வியுடன் அனுபவமும் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமது இல்லத்திலிருந்து 129 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குர்கான் நகரில் இயங்கும் அனைத்துலகப் பள்ளிகளில் அவர் தம் மகனுக்கு இடம் தேடிவருகிறார்.

குறிப்புச் சொற்கள்