வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்பு விழாவில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்வார் என்று வெள்ளை மாளிகை நவம்பர் 25ஆம் தேதியன்று அறிவித்தது.
2021ஆம் ஆண்டில் ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் மோசடி நிகழ்ந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டி, கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதிபர் பதவி ஏற்பு விழாவில் தாம் கலந்துகொள்வது உறுதி என்று அதிபர் பைடன் தெரிவித்திருந்ததாக வெள்ளை மாளிகை கூறியது.
அதிபர் பதவி ஏற்பு விழாவில் அதிபர் பைடனும் அவரது மனைவியும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.