மைக்ரோனீசியா, மார்ஷல்ஸ் தீவுகளில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் கலப்படம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருமல் மருந்து குடித்து சிறுவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டனரா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இறக்குமதி செய்யப்பட்ட Guaifenesin syrup TG syrup என்ற இருமல் மருந்தின் மாதிரிகளில் அளவுக்கு மீறி ரசாயனங்கள் இருந்ததாகவும் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மருந்தில் கலப்படம் இருப்பதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மருந்து QP Pharmachem எனும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. அது பஞ்சாப்பில் உள்ளது.
தாங்கள் ஏற்றுமதி செய்த மருந்துகள் அனைத்து தரக்கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது என்று அந்நிறுவனம் பதில் கூறியுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து சிலவற்றை குடித்து வெளிநாடுகளில் சில குழந்தைகள் மாண்டனர். அந்த மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.