பெல்ஜியத்தில் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

பெல்ஜியத்தில் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ

1 mins read
61745df9-7b99-4087-b4a4-c9a7129621c4
பெல்ஜியத்தின் ஹை ஃபென்ஸ் இயற்கை வனப்பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15 ) புகை கிளம்புவதைக் காட்டும் புகைப்படம். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2
Google News Preferred Icon

பிரசல்ஸ்: இதுவரை காணாத அளவு பரவிவரும் ஆகப் பெரிய காட்டுத்தீயால், பெல்ஜியத்தின் கிழக்கு வட்டாரங்களில் இருந்து குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) வெளியேறத் தொடங்கினர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள பெரிய அளவில் நீரை இறைக்கும் ஹெலிகாப்டர்களுடன் தீயணைப்பு வீரர்கள் பெல்ஜியத்தில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

இதுவரையில் 1,600 ஹெக்டர் அளவு நிலப்பரப்பு காட்டுத்தீக்கு இரையாகிவிட்டது.

வெள்ளிக்கிழமை ‘ஹை ஃபென்ஸ்’ எனப்படும் இயற்கை வனப்பகுதியில் தீ எரிய ஆரம்பித்தது. ஜெர்மனியின் எல்லைப் பகுதியில் அது அமைந்துள்ளது. மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த அவ்விடம் சுற்றலா செல்பவர்களுக்கு மிகவும் புகழ்பெற்றது.

சனிக்கிழமை மதியத்துக்குள்ளாக தீ 16 சதுர கிலோமீட்டர் அளவு பரவிவிட்டது. அதனை பெல்ஜியத்தின் வலோனியா வட்டார ஆட்சியாளர்களின் பேச்சாளர் நிகலஸ் யர்நாக்ஸ் தெரிவித்தார்.

சவர்பொரொட், பியூட்கன்பாட் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து அன்றைய தினம் மாலை 4 மணியளவில் மக்கள் வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்