தென்கொரியா: தென்கொரியத் தலைநகர் சோல், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இவ்வாண்டின் முதல் பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ளது.
கொரிய வானிலை நிர்வாகம் அதுகுறித்து தெரிவித்தது.
ஜொங்னொ கூவில் உள்ள சொங்வோல் டோங்கில் முதல் பனிப்பொழிவு காலை 10 மணயளவில் பதிவுசெய்யப்பட்டதாக அது குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் பனிப்பொழிவைவிட 26 நாள்களுக்கு முன்கூட்டியே இவ்வாண்டின் பனிப்பொழிவு வந்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோலில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் பனிப்பொழிவது புதிதல்ல. 2002, 2010ஆம் ஆண்டுகளில் நவம்பர் 8ஆம் தேதி பனிப்பொழிவு பதிவானது.
சனிக்கிழமை (நவம்பர் 7) சந்திரமுறை நாள்காட்டியின்படி சோலில் பனிக்காலம் தொடங்குகிறது.
