120ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதலை

1 mins read
fe83d552-24bc-4ba3-9c15-c320552e7a58
படம்: மரைன்லாண்ட் முதலை பூங்கா -

விலங்குத் தோட்டத்தில் வாழும் உலகின் ஆக நீளமான முதலை அதன் 120ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது.

காசியஸ் எனப்படும் அந்த முதலை ஆஸ்திரேலியாவின் கீரின் ஐலாந்தில் உள்ள மரைன்லாண்ட் முதலை பூங்காவில் உள்ளது.

கிட்டத்தட்ட 18 அடி நீளம் கொண்ட அந்த முதலை 1987ஆம் ஆண்டு முதல் மரைன்லாண்ட் முதலைப் பூங்காவில் வாழ்ந்து வருகிறது.

18 அடி நீளம் கொண்ட அந்த முதலை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் பரிசாக முதலைக்குப் பிடித்த கோழி, மீன் போன்றவை உணவாக வழங்கப்பட்டது

பொதுவாக முதலைகள் இந்த அளவு பெரிதாக வளர்வதில்லை என்று முதலைகளை ஆராய்ச்சி செய்யும் கிரேம் வெப் கூறினார். ஆனால் இது சற்று ஆச்சரியப்படும் விதமாக வளர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

காசியஸ் முதலை 1984ஆம் ஆண்டு ஃபின்னிஸ் ஆற்றில் பிடிபட்டது. அப்போது அதற்கு 30 முதல் 80 வயதுவரை இருக்கும் என்று கணிக்கப்பட்டதாக வெப் கூறினார்.

120 வயதிலும் காசியஸ் முதலை துடிப்புடன் செயல்படுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்