தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கில் உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாடு

2 mins read
c72cbc87-e5ab-438b-868f-5bb8bddb1a72
தொழில்முனைவோர் மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டனர். - படம்: பெர்னாமா

பட்டர்வெர்த்: பினாங்கில் 15வது உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு ஞாயிறு வரை (ஆகஸ்ட் 17) நடைபெறுகிறது.

தொழில்முனைவோர்களை ஒன்று சேர்க்கும் இடமாக இந்த மாநாட்டுக்கு பினாங்கு ஏற்பாடு செய்துள்ளதாக பெர்னாமா தகவல் தெரிவிக்கிறது.

இந்த வருடாந்திர மாநாட்டிற்கு பல முக்கிய வர்த்தக பிரமுகர்கள் வருகைத் தருவதால் மாநிலத்தின் பொருளாதார திறனை முதலீட்டாளர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் அறிமுகப்படுத்த உதவும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

‘’மலேசியாவும் இந்தியாவும் நீண்ட காலமாக மிக நெருக்கமான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. எனவே, அதை ஒழுங்கமைப்பதன் வழி பினாங்கை அறிமுகப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்’‘, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 16) பினாங்கு பட்டர்வெர்த்தில் உள்ள பிஐசிசிஏ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்டபோது சௌ கோன் இயோவ் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு ஆசியான் மற்றும் ஆசிய பசிபிக் பகுதிக்கான நுழைவாயிலாக பினாங்கை மாற்றுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்று புறநகர் பகுதிகளுக்கான மனிதவள மேம்பாடு - டிஎச்ஆர்ஆர்ஏ மலேசியா மற்றும் மாநாட்டின் தலைவருமான சரவணன் எம். சின்னப்பன் கூறினார்.

‘’இந்நிகழ்ச்சி ஒரு மாபெரும் வெற்றி. அரசாங்கமே பக்க பலமாக இருந்து இந்த மாநாட்டை சொந்த மாநாடாக நடத்தியிருக்கிறது‘ என்று அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டில் 30 நாடுகளிலிலிருந்து ஏறக்குறைய 250 பேராளர்கள் கலந்து கொண்டனர். உள்ளூர் வர்த்தகப் பேராளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

முன்னதாகவே, இணையத்தின் வழி சந்திப்புகளை நடத்தியிருப்பதால் பலரும் தயாரான சூழ்நிலையில் வந்திருக்கிறார்கள்,’‘ என்று திரு சரவணன் மேலும் தெரிவித்தார்.

மூன்று நாள் மாநாட்டை பினாங்கு மாநிலம் முதல் முறையாக ஏற்று நடத்தும் நிலையில், இது மலேசியாவில் மூன்றாவது முறையாக நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்