டெல் அவிவ்: காஸாவில் பிணைக்கைதிகளில் ஒருவரான ஐந்து வயது சிறுவன் ஏரியல் பிபாஸையும் அவரது குடும்பத்தையும் விடுவிக்கக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 5) ஆயிரக்கணக்கில் இஸ்ரேலியர்கள் திரண்டனர்.
ஏரியல், அவனது தம்பி கிஃபிர், பெற்றோர் யார்டன், ஷிரி தம்பதிகள், குடும்பமாக கடந்த அக்டோபர் 7 அன்று காஸா அருகிலுள்ள நிர் ஒஸ் கிபுட்ஸ் நகரிலிருந்து கடத்திச்செல்லப்பட்டனர். குழந்தை கிபிர் பிபாஸ், உயிருடன் இதுவரை இருந்தால், அவருக்கு ஒரு வயதே ஆகியிருக்கும். கடத்தப்பட்ட 251 பேரில், அவரே ஆக வயது குறைந்தவராவார்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு பிள்ளைகளும் தாயாருடன் மாண்டுவிட்டதாக ஹமாஸ் அறிவித்தது. அதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை. பேரணியில் கலந்துகொண்ட பிள்ளைகளின் தாத்தா எல்லி பிபாஸ், “இது மிகக் கொடுமையான நாள். உண்மையை எங்களால் மாற்றமுடியுமென்றால் காஸாவில் இரு குழந்தைகளும் உயிருடன் இருக்கவேண்டும்” என்றார்.
அப்டோபர் மாதத்தில் ஹமாஸ் வெளியிட்டப் பிணைக்கைதிகளின் படங்களில், திருமதி ஷிரி பிபாஸ், சிவந்த தலைமுடியைக் கொண்ட இரு பிள்ளைகளையும் கட்டியணைத்திருந்தார். அந்தக் காட்சி, காஸாவில் தொடங்கிய போருக்கான அடையாளச் சின்னமானது.
காஸாவில் உள்ள பிணைக்கைதிகளான 111 பேரில், அந்த இரு சகோரர்கள்தான் சிறுவர்கள். அந்த எண்ணிக்கையில், கொலை செய்யப்பட்டுள்ள 39 பெரியோரும் அடங்குவர் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
நவம்பர் மாதத்தில் நடந்த குறுகிய போர் நிறுத்தத்தில் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள், பிள்ளைகளின் தந்தையான 34 வயது யார்டன் பிபாஸ், அவரது குடும்பத்துடன் இல்லை என்று கூறியுள்ளனர்.