தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேங்காக் வீதிகளில் ‘மஞ்சள் சட்டை’ போராட்டம்

1 mins read
e75a482e-b6be-43f5-89c2-254fcc6c4e9a
நூற்றுக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தினர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் பதவி விலகக் கோரி பேங்காக் வீதிகளில் ‘மஞ்சள் சட்டை’ அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அண்மையில் பிரதமர் ஷினவாத் கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக ஊடகத்தில் கசிந்தது.

அந்த உரையாடலில் ஷினவாத் திரு சென்னை ‘அங்கிள்’ என்று அழைத்தார். மேலும் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளபதியைத் தமது எதிரியென ‌ஷினவாத் குறிப்பிட்டார். இந்த உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நூற்றுக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு அருகே திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஷினவாத்திடம் பிரதமருக்கு உண்டான தகுதிகள் ஏதும் இல்லை என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
பேங்காக்தாய்லாந்துபோராட்டம்